TNPSC Group 2 Exam Result: 53 நாட்களில் வெளியான தேர்வு முடிவு

Published : May 15, 2025, 03:59 PM IST
TNPSC

சுருக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

வணிகவரித்துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், இளநிலைி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவி இடங்கள் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.

மேலும் கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய தணிக்கை உதவி ஆய்வாளர், இளநிலை கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 2ஏ பிரிவின் கீழ் வருகின்றன. இரண்டு பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக குரூப் 2 பிரிவில் 534 பணியிடங்களும், 2ஏ பிரிவில் 2006 பணியிடங்களும் நிரப்பப்படுவதற்காக கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. மொத்தமாக இந்தத் தேர்வினை 5,80,000 இளைஞர்கள் எழுதியிருந்தனர்.

குரூப் 2, 2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்தனால் முதன்மைத் தேர்வு முதல் தாள் தேர்வு கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. முதன்மைத் தேர்வின் இரண்டாவது தாள் தேர்வு கடந்த பிப்ரவரி 23ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnpsc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்