மக்களே உஷார்.. காவல்துறை வெளியிட்ட புது வீடியோ..ஐடியாக்களை அள்ளி வழங்கிய போலிசார்..

By Thanalakshmi VFirst Published Dec 22, 2021, 9:17 PM IST
Highlights

நகை கடைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்று தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
 

கடந்த 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக டிக்கா ராமன் என்பவரை வேலூர் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தன்ர். மேலும் அவனிடம் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணையில் சுடுகாட்டில் மறைத்து வைத்திருந்த கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டனர். 

நகைகடையில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளில் அடிப்படையிலே தனிப்படை போலீசார் தீவிர தெடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். குரங்கு முகமூடி, மெல்லிய தேகம், நீண்ட நேரம் நின்ற ஆட்டோ உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொள்ளையன் பிடிப்பட்டான். எனவே இந்த கொள்ளையில் சிசிடிவி காட்சிகள் தான், குற்றவாளியை விரைவாக கைது செய்ய முக்கிய பங்காற்றியது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதனால் நகைக்கடையினர் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என தமிழக காவல்துறையினர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கடையை சுற்றி நான்கு புறமும் அதி நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.மேலும் சிசிடிவி கேமராக்களை மாதம் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், கடையின் முன் மற்றும் பின் பக்கம் போதுமான இரவு பாதுகாவலர்களை நியமித்து கூர்ந்து கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள நகைகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக எச்சரிக்கை ஒலியுடன் கூடிய பெட்டகத்தில் வைக்க வேண்டுமென கூறியுள்ளனர். இறுதியாக , காவல்துறையினரால் நடத்தப்படும் கலந்தாய்வு கூடத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.

முன்னதாக ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடர்களை குறித்து எச்சரிக்கும் அலாரம் இருந்தும் அது வேலை செய்யவில்லை. மற்றொரு பெரிய பிழை சிசிடிவி கேமரா வெறும் கடையினுள் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததே தவிர கடையின் பின்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்படவில்லை. இதனைச் சாதகமாக பயன்படுத்தி எளிதில் பின் வழியாக குற்றவாளி உள்ளே நுழைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு இரவும் வந்து பொறுமையாக துளையிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு காவலாளிகள் காவல் பணியில் இருந்தும் அவர்கள் பின் பகுதிக்குச் சென்று பார்ப்பதில்லை. இதனால் அந்த துளை அவர்கள் கண்களுக்கு படவில்லை என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய அறிவுரைகள்https://t.co/CPT2wpwNa8 pic.twitter.com/Z6AAnYPdvx

— Tamil Nadu Police (@tnpoliceoffl)
click me!