Gutka : தமிழகம் முழுவதும் ‘அதிரடி’ ரெய்டு.. 2,983 பேர் கைது.. 15 டன் குட்கா பறிமுதல்…

By Raghupati RFirst Published Dec 14, 2021, 1:05 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் 8 நாட்களில் குட்கா பதுக்கி வைத்திருந்ததாக 2,983 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.  கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் சென்னை நகரம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் போலீசார் குட்கா பதுக்கி வைத்திருந்தவர்களை கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 8 நாட்களில் குட்கா பதுக்கி வைத்திருந்ததாக 2,983 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 2,940 வழக்குகள் பதியப்பட்டு 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 3,818 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்ததாக 154பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!