எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது ..

By Thanalakshmi VFirst Published Oct 19, 2022, 7:26 AM IST
Highlights

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு  தொடங்கியது. ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவினருக்கு நேரடியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. 

இளநிலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.  அதனை தொடர்ந்து தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி அக்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்து கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. கடந்த திங்கள்கிழமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நிகழாண்டு மருத்து படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

மேலும் படிக்க:MBBS படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.. கலந்தாய்வு எப்போது தெரியுமா?

இதனைதொடர்ந்து இன்று மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.சிறப்பு பிரிவில் உள்ள 231 இடங்களில் இன்று 69 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் என மொத்தம் 556 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

பொதுகலந்தாய்வு இன்று முதல் 25 ஆம் தேதிவரை இணையவழியில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 21 முதல் 27 ஆம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

மேலும் படிக்க:மருத்துவ படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் நாளை வெளியீடு.. கலந்தாய்வு குறித்து அறிவிப்பு..

click me!