அரசு மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என காதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்
தமிழக சுகாதாரத்துறை அண்மைக்காலமாகவே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, அரசு மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு அரசு மருத்துவமனைகளுக்கு வருவதில்லை எனவும், இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர் எனவும் புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என காதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள், சுகாதார பணியாளர்கள் வெளிநோயாளிகளுக்கான நேரத்தை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கான நேர அட்டவணையை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், மருத்துவர்கள் சரியான நேரத்தைக் கட்டாயமாக கடைபிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதியாக சி.வி. கார்த்திகேயன் நியமனம்
அதன்படி, “அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும். அரசு மருத்துவமனை முதல்வர்கள், இயக்குநர்கள், சுகாதாரப் பணியாளர்கள் புறநோயாளிகளுக்கான நேரத்தை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருப்பது அவசியமாகும். மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணியில் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.” என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.