தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழுக்கள் அமைப்பு!

By Manikanda PrabuFirst Published Dec 19, 2023, 4:14 PM IST
Highlights

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு கி.செந்தில்ராஜ் ஐஏஎஸ், ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும். தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு;

Latest Videos

** ஐஸ்வர்யா ஐஏஎஸ், கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830 

** ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி,  தொலைபேசி எண். 9943744803

** எஸ். அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக  உதவியாளர் (பொது), தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை ஒருங்கிணைக்க திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஐஏஎஸ் தொலைபேசி எண். 9442218000.

மேலும், இப்பணியினை கூடுதலாக ஒருங்கிணைக்க;
** கிஷன் குமார், ஐஏஎஸ் உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி, தொலைபேசி எண்.  9123575120
** ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி,  தொலைபேசி எண். 9940440659 ஆகிய அலுவலர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

சதம் அடித்த எம்.பி.க்கள் இடை நீக்கம்: அமித்ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம்!

இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர், அமுதா, ஐஏஎஸ் செயல்படுவார்.

நிவாரணப் பொருள்கள் வழங்க விரும்புவோர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்காணும் அலுவலர்களை தொடர்புகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

click me!