Two-wheeler subsidy : 10,583 பேருக்கு இருசக்கர வாகன மானியம்… நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

Published : Dec 01, 2021, 06:11 PM ISTUpdated : Dec 01, 2021, 06:19 PM IST
Two-wheeler subsidy : 10,583 பேருக்கு இருசக்கர வாகன மானியம்… நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

சுருக்கம்

10,583 பேருக்கு இருசக்கர வாகன மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க, மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

10,583 பேருக்கு இருசக்கர வாகன மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க, மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்தில்‌ பதிவு செய்யப்பட்டு, வக்பு நிறுவனங்களில்‌ பணியாற்றும்‌ உலமாக்கள்‌ தங்கள்‌ பணியினை சிறப்பாகவும்‌, செம்மையாகவும்‌ செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள்‌ வாங்க மானியம்‌ வழங்கும்‌ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத்திட்டத்தின்‌ கீழ்‌, பயனாளிகள் வாங்கும்‌ இருசக்கர வாகனத்தின்‌ கொள்ளளவு 125 சிசிக்கு மிகாமலும்‌, வாகன விதிமுறை சட்டம்‌ 1998ன் படி பதிவு செய்திருக்க வேண்டும்‌. இந்தத் திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின்‌ மொத்த விலையில்‌ 50 சதவீதம் அல்லது வாகனத்தின்‌ விலையில்‌ ரூ.25,000, என்று இதில்‌ எது குறைவோ அந்தத்தொகை மானியமாக வழங்கப்படும்‌.

கடந்த, 2017 – 18 ஆம் நிதியாண்டில் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், சென்னை மாநகராட்சியில், 9,519 பேர், மானியம் பெற்று பயனடைந்தனர். அதேபோல், 18 - 19 நிதியாண்டில், 9,519 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 10 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்த நிலையில், 10 ஆயிரம் பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. அவற்றில், 6,500 பேர் மட்டுமே, புதிதாக வாகனம் வாங்கி பயனடைந்துள்ளனர். 2019 - 20 நிதியாண்டில், 4,320 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10, 583 பேருக்கு, 4 கோடியே 76 லட்சத்து 73 ஆயிரத்து ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ்,  பணியாளர்கள் வாங்கும் இருசக்கர வாகனங்கள் 125 சிசி மிகாமலும், வாகன விதிமுறை சட்டம் 1998 பதிவு செய்திருக்க வேண்டும்.  இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 % அல்லது வாகனத்தின் விலையில் 25 ஆயிரம் ரூபாய் என எது குறைவோ அந்த தொகையை மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்