
தனியார் பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம் உயர்வால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், கல்லூரி மாணவர்கள் முதல்,பொதுமக்கள் அனைவரும் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில்,தனியார் பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்துகள் மே மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.