இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை... இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

Published : Nov 09, 2022, 05:16 PM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை...  இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

சுருக்கம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 27ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 7 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: நவம்பர் 11.! பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் - 2024 கூட்டணிக்கு அடித்தளமா.?

இதை அடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் அவர்களை நவ.9 (இன்று) வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்பேரில் சிறையில் இருந்த மீனவர்களின் சிறைக்காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் இன்று மீனவர்கள் மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதையும் படிங்க: தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 15 லட்சம் பேர் நீக்கம்..! ஏன் தெரியுமா..?

அப்போது நீதிபதி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 2 மாதத்திற்குள் மீண்டும் கைது பிடிப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை அடுத்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?