Breaking : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த தேதியில் வெளியாகும்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Published : May 15, 2023, 03:48 PM IST
Breaking : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த தேதியில் வெளியாகும்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

சுருக்கம்

வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9,96, 089 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 24-ம் தேதியே தொடங்கப்பட்டது. மே 17-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வரும் 19-ம் தேதி காலை 10 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேர்வு கிடையாது.. HAL நிறுவனத்தில் வேலை.. ஐடிஐ, டிகிரி படித்தவர்களுக்கு அரியவாய்ப்பு!

https.www.tnresults.nic.in, https/www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் உடனடியாக அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : 15 ஆண்டுகளாக மருத்துவ விடுப்பில் உள்ள ஐபிஎம் ஊழியர்.. தனது நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

PREV
click me!

Recommended Stories

ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?