நஷ்ட கணக்கு காண்பிக்கும் அரசு போக்குவரத்து - "எங்களுக்கு சேரவேண்டியதை கொடு... இல்லன்னா ஸ்ட்ரைக்...!!!"

 
Published : Jan 31, 2017, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
நஷ்ட கணக்கு காண்பிக்கும் அரசு போக்குவரத்து - "எங்களுக்கு சேரவேண்டியதை கொடு... இல்லன்னா ஸ்ட்ரைக்...!!!"

சுருக்கம்

பிப்.15 முதல் மாநிலம் முழுதும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சென்னையில், நடைபெற்ற போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர்  கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: 

அரசு போக்குவரத்துக் கழகங்கள், பொதுமக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதற்கான செலவை, அரசு தராததால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை, நஷ்டம் என, அரசு கணக்கு காட்டுவது சரியல்ல.

வருவாய் இழப்பால், ஊழியர்களின் வைப்புத்தொகை, காப்பீட்டு உள்ளிட்ட, 5,000 கோடி ரூபாயை, போக்குவரத்து கழகங்கள் எடுத்து, செலவு செய்து விட்டன. இதனால், ஓய்வூதியர்களுக்கு, பண பலன்கள் கிடைக்கவில்லை. 

ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்டில் முடிந்தது. அதற்கு முன், 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி முடித்திருக்க வேண்டும். இதுவரை, பேச்சு நடத்தவில்லை. பேச்சை துவக்கா விட்டால், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்.

இது குறித்து விரைவில் த்மிழக அரசுக்கு, ' வேலை நிறுத்த நோட்டீஸ்' அளிக்க உள்ளோம்”. அரசு அலட்சியம் காட்டினால், பிப்., 15 முதல், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

PREV
click me!

Recommended Stories

என்னடா இது வம்பா போச்சு.. திங்கள் கிழமை அதுவுமா தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் மின்தடை!
நாளுக்கு நாள் முற்றும் செவிலியர்களின் போராட்டம்.. அதிகாரத் திமிரில் ஆட்டம் போடும் திமுக.. அன்புமணி ஆவேசம்