
ஓய்வு பெற இருந்த இன்று, லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின்படி, நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம், சட்டத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், நீதிபதியாக வேலை பார்ப்பவர் சர்வமங்கலம். சில ஆண்டுகளுக்கு முன் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சர்வமங்கலம் நீதிபதியாக இருந்தார். அப்போது, ஒரு வழக்கை திசை திருப்புவதற்காக, வழக்கறிஞர் ஒருவருக்கு லஞ்சம் கொடுத்ததாக, இவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்த விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், நீதிபதி சர்வமங்கலம் இன்று பணி ஓய்வு பெற இருந்தார். ஆனால், லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில், அவர் திடீரென இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓய்வு பெறும் கடைசி நாளில், நீதிபதி ஒருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வந்த தகவல், சட்டத்துறை நிபுணர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.