
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடைசி நாளன்று சென்னையில் வெடித்த வன்முறை சம்பந்தமாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவுள்ளதாக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
கடந்த ஜனவரி 17 அன்று ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சென்னையில் திரண்ட மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம் பெரிய அளவில் உருவெடுத்து மாநிலம் முழுவதும் போராட்டமாக மாறியது.
6 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் இளைஞர்கள் அமைதியான முறையில் போராடினர்.
போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே பல்வேறு அமைப்புகள் மாணவர்கள் போர்வையில் உள்ளே புகுந்தன.
மாணவர்கள் போராட்டத்தை அடுத்து தள்ளி சென்ற பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்தார்.
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற தமிழக அரசு கேட்டு கொண்டது.
இதனையேற்று மாணவர்கள் பெரும்பாலனோர் கலைந்து சென்றனர்.
அவர்களில் ஒரு பகுதியினர் கலையாமல் கடற்கரையில் திரண்டிருந்தனர் ஜன 23 அன்று காலையில் அவர்களை அகற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம், ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்தது. மாட்டங்குப்பம் மீன் மார்க்கெட் எரிக்கப்பட்டது.
போலீஸ் வாகனகள் தீயிட்டு எரிக்கப்பட்டது. ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரை உள்ளே வைத்து ஒரு கும்பல் தீவைத்து எரித்தது.
சென்னை முழுவதும் கலவரம் பரவியது. போலீசார் கலவரத்தை கலைக்க தடியடி நடத்தினர்.
அதில் சில போலீசார் வாகனங்களுக்கு தீவைத்த காட்சிகளும் வெளியானது.
போலீசார் நடத்திய தடியடி தாக்குதல் குறித்து அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவதன.
அரசு தரப்பில் சட்டசபையில் முதல்வர் விளக்கம் அளித்தார.
அப்போது எதர்கட்சி தலைவர் ஸ்டாலின் போலீசார் நடத்திய வன்முறை குறித்து பேசினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் இது பற்றி தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் 110ஆவது விதியின் கீழ் முதல்வர் ஒரு அறிக்கையை படித்தார்.
அதில் ஜனவரி 23 நடந்த வன்முறையில் கைதான 36 பள்ளி மாணவர்களை அவர்களின் எதிர்கால நலன் கருதி விடுதலை செய்து வழகுகளை வாபஸ் வாங்குவதாக தெரவித்தார்.
தீ வைத்ததாக போலீசார் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப்படுதப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் அந்த ஆணைய குழு அனைத்து அம்சங்களையும் விசாரித்து 3 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்றும் அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்று கொண்ட ஓபிஎஸ் சட்டசபையில் 110அவது விதியின் கீழ் படிக்கும் முதல் அறிக்கை இது.