ராமநாதபுரத்தில் புதிய மீன் பிடித்துறைமுகம்…மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை.. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்..

 
Published : Mar 16, 2017, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
ராமநாதபுரத்தில் புதிய மீன் பிடித்துறைமுகம்…மதுரையில் பால் பதப்படுத்தும் ஆலை.. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்..

சுருக்கம்

tn budget

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பால்வளத்துறை

ஆவின்பால் பொருட்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள் திறக்கப்படும்


 25 புதிய கால்நடை கிளை மையங்கள் உருவாக்கப்படும்
கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
 6 லட்சம் வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு வழங்கப்படும் - இதற்கு ரூ. 182 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
 ஏழைகளுக்கு 12 ஆயிரம் பசுக்கள், 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்
 நாட்டு மரபின மாடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு
 மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்

மீன்வளத் துறை



மீன்வளத்துறைக்கு ரூ.860 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்
இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்பட்டு வந்த  டீசல் அளவு 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு

கடர் அரிப்பைத் தடுக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் ரூ.113 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!