மூன்று லட்சம் கோடிக்கு மேல் கடன்சுமை… சமாளிக்குமா எடப்பாடி அரசு..

 
Published : Mar 16, 2017, 11:18 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
மூன்று லட்சம் கோடிக்கு மேல் கடன்சுமை… சமாளிக்குமா எடப்பாடி அரசு..

சுருக்கம்

tn budget

மூன்று லட்சம் கோடிக்கு மேல் கடன்சுமை… சமாளிக்குமா எடப்பாடி அரசு..

2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் சுமை 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாய் அளவு இருப்பதால் நடப்பு ஆண்டு செலவுகளை தமிழக எப்படி சமாளிக்கும்? என கேள்வி எழுந்துள்ளது.

2017 -18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஜெயகுமார்  இதனை தாக்கல் செய்தார்,

ஜெயலலிதா இல்லாத முதல் பட்ஜெட் என்பதால் இது குறித்த எதிர்பார்ப்பு நிலவியது. பட்ஜெட்டின் முதல் தகவலே மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி 2017-18 ஆம் ஆண்டிடுக்கான நிதி பற்றாக்குறை 41 ஆயிரத்து 977 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2018 மார்ச் மாதம் தமிழகத்தின் கடன் தொகை 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாய் என அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.

இந்த நிதி நிலை அறிக்கையின்படி தமிழக அரசின் கடன் 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாயாகும்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் 1 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. 2017 .18 ஆம் ஆண்டுக்கு 41 ஆயிரத்து 965 கோடி ரூபாய் கடன் வாங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மேலும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1200 கோடி ரூபாய் நிதி திரட்டவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதத்தலிருந்து 7 சதவீதமாக உயரும் எனவும், பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆண்டுக்கு ஆண்டு கடன் தொகை அதிகரித்து வரும் நிலையில் இலவச திட்டங்களுக்கு எடப்பாடி அரசு எப்படி நிதி ஒதுக்கீடு செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இத்தனை கடன் தொகையை எடப்பாடி அரசு எப்படி சமாளிக்கப் போகிறது?

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!