TN Budget 2022: இளைஞர்களுக்காக 'நான் முதல்வன் திட்டம்': அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடிவாய்ப்பு: முழுவிவரம்

Published : Mar 18, 2022, 03:08 PM IST
TN Budget 2022: இளைஞர்களுக்காக 'நான் முதல்வன் திட்டம்': அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடிவாய்ப்பு: முழுவிவரம்

சுருக்கம்

TN Budget 2022:ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவியலில், சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம் வரும் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதியஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவியலில், சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம் வரும் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் நிதியஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.

நிதி உயர்வு

கடந்த 2021-22ம் நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால திருத்த பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டைவிட 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில், கூடுதலாக ரூ.300 ஒதுக்கப்பட்டு, ரூ.5,668.89 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அவர் பேசியதாவது:

அறிவுசார் நகரம்

உயர்கல்வித்துறையை மேம்படுத்த உலகளாவிய பங்களிப்புடன் அறிவுசார் நகரம் உருவாக்கப்படும். அறிவுசார் நகரம் உலகில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும். ஆராய்ச்சி, மேம்பாட்டு மையங்கள், திறன்பயிற்சி மையங்கள், அறிவுசார் தொழில் நிறுவனங்களை கொண்டதாக அமைக்கப்படும்.

கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், விடுதிகள், திறன்மிகு வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்க வரும் ஆண்டில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.முன்னுரிமை அடிப்படையில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக ரூ.204 கோடி ஒதுக்கப்படும்.

நான் முதல்வன்

ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவுத் திட்டமாக நான் முதல்வன் திட்டம் இருந்து வருகிறது. இந்தத் திட்டத்தில் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் தனித்திறமை ஊக்குவிக்கப்படும். மேலும் தொழில்நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப மாணவர்களின் திறன் மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும்.இதன் மூலம் மாணவர்களின் வேலைபெறும் திறன் பெருகும். இந்தத் திட்டத்தைச்செயல்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

உலகத் தமிழர்கள் 

உலகெங்கும் பல நாடுகளில் தமிழர்கள் பேராசிரியர்களாக, தொழில்முனைவோர்களாக, விஞ்ஞானிகளாக சாதனைபுரிந்துவருகிறார்கள். பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தை மாற்றுதல், மேம்படுத்துதல், மாணவர்களுக்கு வழிகாட்டுதல், வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சி செய்தல் போன்றவற்றை உலகெங்கும்உள்ள சாதனைத் தமிழர்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டம் உருவாக்கப்படும்

ஐஐடி வாய்ப்பு

ஐஐடி, ஐஎஸ்டி, ஏஏஎம்சி உள்ளிட்ட புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்வதைஊக்குவிக்க, இந்த கல்வி நிறுவனங்களில் இளநிலைப்படிப்புக்கான செலவுகளை அரசே ஏற்கும். 6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்புவரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.
இ்வ்வாறு பழனிவேல் ராஜன் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

எம்ஜிஆர்., ஜெயலலிதா ஸ்டைலில் விஜய் மாபெரும் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் நம்பிக்கை
TVK vijay: தவெக இத்தனை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.! விஜய்க்கு வாய்ப்பே இல்லை.! கணித்து சொன்ன பிரபல ஜோதிடர்.!