ஸ்காட்லாந்துக்கு இணையான காவல்துறை.. இப்படி பண்றீங்களே? மீஞ்சூர் சலீம் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்..

By Raghupati R  |  First Published Mar 16, 2024, 2:11 PM IST

தமிழ்நாடு அரசு மீது அவதூறுகள் மற்றும் பொய் செய்திகளை பரப்பியதாக பாஜகவை சேர்ந்த மீஞ்சூர் முகமது சலீம் முபாரக் அலி என்ற நபர் கைது செய்யபட்டார். இதனை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த சகோதரர் திரு மீஞ்சூர் சலீம் அவர்களை, பெங்களூரு விமான நிலையம் வரைச் சென்று கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சிக்கும் தரங்கெட்ட திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Latest Videos

போதைப் பொருள்கள் விற்பவர்களுக்கும், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், கட்சிப் பதவி கொடுத்து அழகு பார்க்கும் திமுக, சமூக வலைத்தளங்களில் திமுகவை விமர்சிப்பவர்களை மட்டும், வெளிமாநிலங்களுக்குக் கூட, தேடிச் சென்று கைது செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. 

திமுகவின் இரட்டை வேடத்தையும், பிரிவினைவாத அரசியலையும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த சகோதரர் திரு அவர்களை, பெங்களூரு விமான நிலையம் வரைச் சென்று கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச்…

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k)

ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான தமிழகக் காவல்துறை, திமுக ஆட்சியில், சமூக விரோதிகளை எல்லாம் விட்டுவிட்டு, சமூக வலைத்தளங்களின் குரலை முடக்க மட்டுமே பயன்படுத்தப்படுவது, வருத்தத்திற்குரியதும், காவல்துறையின் மாண்பை களங்கப்படுத்துவதும் ஆகும். காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவிஎம் மெஷின் எனப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? முடியாதா? ஓர் அலசல்!

click me!