
சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக டி.கே. ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக உளவுத்துறை டி.ஜி.பி., ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். அவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய டிஜிபி குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரனே மீண்டும் நியமிக்கப்படலாம் என்றும் அவருக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகின.
ஆனால், குட்கா, பான்மசாலா விவகாரத்தை சுட்டிக்காட்டி, டி.கே.ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது, புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வற்புறுத்தி வந்தனர்.
டிஜிபியாக நியமிக்கப்படுபவர் குறைந்தது 2 ஆண்டு அந்த பதவியில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மேலும், டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவரின் (யுபிஎஸ்சி சேர்மன்) ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய பணி மூப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாங்கிட், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்திரன், ஜார்ஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவர் புதிய டிஜிபி யாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படடது.
இந்நிலையில் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக டி.கே. ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக உளவுத்துறை டி.ஜி.பி., ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். அவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவரது பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் நியமனம் செய்யப்பட்டுள்ளது.