திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆட்சியர்கள் அதிரடி இடமாற்றம்... உத்தரவு பிறபித்தது தமிழக அரசு!!

By Narendran S  |  First Published Feb 3, 2023, 6:07 PM IST

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 


திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அன்மைகாலமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. கடந்த ஜன.1 ஆம்  தேதி 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு ஆகியவை தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து ஜன.30 ஆம் தேதி 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: ஓசூர் கலவரத்தில் இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்தது ஏன்? எஸ்.பி. பரபரப்பு விளக்கம்

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், தற்போது திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ், ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க: புதுவையில் பள்ளி சீருடையில் சட்டமன்றம் வந்த திமுக உறுப்பினர்கள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷாவா இட மாற்றம் செய்யப்பட்டு, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சமீபமாக தான் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!