டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பி திருட்டு!

By SG Balan  |  First Published May 25, 2024, 8:50 AM IST

உடைக்கப்பட்ட மின்மாற்றியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்களையும் திருட்டிச் சென்றுள்ளனர். இத்துடன் தண்ணீர் இறைக்கும் அறையில் இருந்த மின் சாதனங்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


திருப்பத்தூரில் டிரான்ஸ்பார்மரை உடைத்து அதிலிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பியை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சோமலாபுரத்தில் சின்ன கொம்பேஸ்வரம் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தண்ணீர் இறைக்கும் அறையும், நீர்த்தேக்கத் தொட்டியும் உள்ளன. இந்த நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சுமார் 12 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த இடத்திற்கு அருகில் கிட்டத்தட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான 250 கிலோ வோல்ட் மின்மாற்றி உள்ளனது. தண்ணீர் இறைக்கும் அறைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின்வாரியம் இந்த டிரான்ஸ்பார்மரை அமைத்துள்ளது. இந்நிலையில், இந்த டிரான்ஸ்பார்மரை மர்ம நபர்கள் உடைத்துப் போட்டிருக்கிறார்கள்.

இதற்காக தான் திமுக பிரமுகரை போட்டுத்தள்ளினோம்.. சிறுவன் உட்பட 6 பேர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

உடைக்கப்பட்ட மின்மாற்றியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காப்பர் ஒயர்களையும் திருட்டிச் சென்றுள்ளனர். இத்துடன் தண்ணீர் இறைக்கும் அறையில் இருந்த மின் சாதனங்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டு குறித்து ஆம்பூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் ஆம்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் ஒயர்களை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

புதிய சியோமி ஸ்மார்ட் டிவி... 150 லைவ் ஸ்ட்ரீம் சேனல்கள்... தம்மா துண்டு விலையில் வீட்டயே தியேட்டர் ஆக்கலாம்!

click me!