பிரியாணி கிண்டிய பிள்ளையார் பேனரால் சர்ச்சை.. கடை ஓனரை தட்டித் தூக்கிய போலீஸ்.. என்ன நடந்தது?

Published : Sep 14, 2026, 06:10 PM IST
Tirunelveli Biryani Banner

சுருக்கம்

Tirunelveli Biryani Banner: விநாயகர் சதுர்த்திக்கு ரூ.99-க்கு பிரியாணி ஆஃபர் கொடுத்த கடைக்காரர், விநாயகரே பிரியாணி செய்வது போன்ற பேனர் வைத்ததால் சர்ச்சை வெடித்தது. இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் மக்கள் விநாயகப் பெருமானை மனமுருக வேண்டி, அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டை உணவுகளை படைத்து வருகின்றனர்.

பிரியாணி கிண்டிய பிள்ளையார் பேனரால் சர்ச்சை

இந்த நிலையில், இன்றைய புனிதமான நாளில் தமிழ்நாட்டில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வியாபாரத்தை அதிகப்படுத்துவதற்காக, இந்துக்களின் கடவுளான விநாயகரே சிக்கன் பிரியாணி செய்வது போன்ற பேனரை வைத்த பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

என்ன நடந்தது?

திருநெல்வேலி வி.எம். சத்திரம் பாலம் அருகில் ஜெயந்த் என்பவர் ஒரு பிரியாணி கடை வைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களுக்கு அரேபிக் ஸ்டைல் சிக்கன் 65 பிரியாணியை வெறும் 99 ரூபாய்க்கு தருவதாக ஆஃபர் அறிவித்தார். ஆனால், இந்த ஆஃபருக்கான விளம்பர பேனரில், விநாயகரே ஒரு பிரியாணி பாத்திரத்தில் சிக்கன் பிரியாணி சமைப்பது போன்ற படத்தை போட்டு, கடைக்கு முன்னாடி ஒரு பெரிய பேனரை கட்டி தொங்கவிட்டிருந்தார்.

Ganesh Chaturthi 2026: கணபதி பாப்பாவை வீட்டுக்கு வரவேற்க ரெடியா? இதோ சிம்பிள் டிப்ஸ்!

போராட்டத்தில் குதித்த இந்து அமைப்புகள்

இந்த பேனரை பார்த்ததும் உள்ளூர் மக்களும், இந்து முன்னணி அமைப்பினரும் கொந்தளித்துவிட்டனர். புனிதமான பண்டிகை நாளில், முதல் கடவுளான விநாயகரை அசைவ பிரியாணியோடு தொடர்புபடுத்தி விளம்பரம் செய்ததை கண்டித்து, கடைக்கு முன்னாடி கூடி போராட்டம் நடத்தினர். மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்திவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

பேனர் கிழிப்பு, உரிமையாளர் கைது

விஷயம் அறிந்ததும், திருநெல்வேலி நகர போலீஸ் உடனே சம்பவ இடத்திற்கு வந்து, கடையின் கவுண்டர் மீது ஏறி அந்த சர்ச்சைக்குரிய பேனரை கிழித்தெறிந்தனர். மத உணர்வுகளை புண்படுத்தியதற்கும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்ததற்கும் கடை உரிமையாளர் ஜெயந்த்தை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Chanakya Niti: இந்த 4 இடங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்! முழு விவரம்!

சோஷியல் மீடியாவிலும் கடும் எதிர்ப்பு

இந்த சம்பவத்தின் போட்டோ மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி, நெட்டிசன்கள் அந்த கடைக்காரரை கடுமையாக விமர்சித்தனர். 'வியாபார லாபத்துக்காக இந்து கடவுளை இப்படி அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்? மற்ற மத கடவுள்களை இப்படி சித்தரிக்க இவங்களுக்கு தைரியம் வருமா? இந்துக்களின் பொறுமையை சோதிக்காதீர்கள்' என்று பலரும் கொந்தளித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tourist Places: தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்கப் போறீங்களா? முக்கிய சுற்றுலா தலங்களின் முழு லிஸ்ட்!
ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!