திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்.. முதலமைச்சர் தொடங்கி வைப்பு..

By Thanalakshmi VFirst Published Sep 28, 2022, 12:37 PM IST
Highlights

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்  300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 

2021-22 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் “திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, முழுமையான திருப்பணிகள் மற்றும் இதர பணிகள் பெருந்திட்ட வரைவு திட்டத்தின்படி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருக்கோயில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  

மேலும் படிக்க:ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள்.. உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவு..

திருக்கோயில் நிதி மூலமாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள்,பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம்  மற்றும் விபூதி தயாரிப்பு கட்டடம், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1951-ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய திருப்பணி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பக்தர்களே மகிழ்ச்சி செய்தி !! திருப்பதி - திருமலை இடையே 10 பேட்டரி பேருந்து சேவை தொடக்கம்

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி கனிமொழி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும், திருச்செந்தூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். 
 

click me!