தேனியில் வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து

By Dinesh TGFirst Published Sep 28, 2022, 12:30 PM IST
Highlights

தேனி அருகே வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமான நிலையில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் தனியார்  வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மூன்று தளங்களை கொண்ட இந்த வளாகத்தில் ரெடிமேட் ஷோரும், காலணிகள் விற்பனையகம், நிதி நிறுவனம் என  10க்கும்  மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. அதில் உள்ள இரண்டாவது தளத்தில்  சின்னமனூர் பகுதியைச்  சேர்ந்த பொறியாளர் சிவக்குமார் என்பவர் கட்டுமானப் பணிகள் தொடர்பான அலுவலகத்தை நடத்தி வருகின்றார். 

ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள்.. உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவு..

இந்நிலையில் அந்த அலுவலகத்தில் வழக்கம்போல  பணியாளர்கள் நேற்று மாலையில் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் அலுவலகத்தின் உள்ளே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூட்டிய அலுவலகத்தில் சிறிது நேரத்தில் பற்றிய தீ  மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. கண் இமைக்கும  நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அலுவலகம் முழுவதும் தீக்கிரையானது‌. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவுவது தவிர்க்கப்பட்டது. ‌‌‌

தமிழக அரசின் அலங்கார ஊர்தி..? குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி கிடைக்குமா..? கெடு விதித்த மத்திய அரசு

முதற்கட்ட விசாரணையில் அலுவலகத்தில் இருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும், இந்த விபத்தில் சுமார்  ரூ. 7லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து பழனி செட்டி பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!