திருச்செந்தூர் கோவிலுக்கு போறீங்களா..? இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க…

By Raghupati R  |  First Published Jan 10, 2022, 6:37 AM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய இன்று முதல் நேரக் கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,48,308 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,00,286 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று முதல் காலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்டுகிறது. தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 3 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!