MK Stalin: மக்கள் அரசைத் தேடி வந்த காலம் மாறிவிட்டது - முதல்வர் ஸ்டாலின் உரை

By SG BalanFirst Published Mar 5, 2023, 1:37 PM IST
Highlights

மக்கள் அரசைத் தேடி வரும் நிலை மாறி, அரசே மக்களைத் தேடி வரும் காலம் வந்துவிட்டதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் 'கள ஆய்வின் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் மாநிலத்தின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள் தென்மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இதற்காக முதல்வர் இன்று மதுரை வந்தார். முதலில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

இதில், மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு வர்த்தக சங்க நிர்வாகிகள், சிறு குறு தொழிற்சங்கத்தினர், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர், நெசவாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுவினர், ராமநாதபுரம் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Keezhadi Museum: கீழடி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்

தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களைப் முதல்வர் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உங்களைத் தேடி நாங்கள் வந்துள்ளோம்; மக்கள் அரசைத் தேடி வந்த காலங்கள் மாறி அரசு மக்களைத் தேடி வருகிறது. தமிழக அரசு மக்கள் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அனைத்து துறைகளின் கருத்துகளைக் கேட்டுத்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், "விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து கட்டாயம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்க தனி கொள்கைகளை வகுத்துள்ளோம். விவசாயிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்." எனவும் முதல்வர் கூறினார். "அனைத்து துறையினரின் ஆலோசனைகளையும் பெற்றுதான் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு செயல்படும்" என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!! பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்..!! எப்படி வாங்குவது?

click me!