
தருமபுரி
தருமபுரியில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் பெய்த மழையாலும், இதமான சூழ்நிலை நிலவியதாலும் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர்.
தருமபுரியில், நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. மழை பெய்வதாலும், இதமான சூழ்நிலை நிலவுவதாலும் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
அடித்த காற்றிற்கு, அதியமான்கோட்டை துணை மின் நிலைய வளாகத்தில் இருந்த மரம், மின் கம்பம் மீது சாய்ந்ததால் அந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
மேலும், இரவு நேரம் என்பதால் உடனடியாக மின் விநியோகமும் சீர் செய்யப்பட முடியாததால் திங்கள்கிழமை இரவு சுமார் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகம், செந்தில்நகர், வெங்கட்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர், மின் ஊழியர்கள் நேற்று காலை சாய்ந்த மரத்தை அகற்றி மின் விநியோகத்தை சீரமைத்து செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து பெய்த மழையளவு (மி.மீ):
அரூர் 54.20,
தருமபுரி 19.50,
பாலக்கோடு 12,
பென்னாகரம் 19,
ஒகேனக்கல் 38.
மாவட்ட சராசரி மழையளவு 20.39.