புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாடு கல்விக்கான 2000 கோடி ரூபாய் நிதியை விடுவிப்போம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். ஆனால், தமிழகத்தில் மும்மொழிக்கு ஒருபோதும் ஏற்க முடியாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புதிய தேசிய கல்வி கொள்கை
இந்நிலையில் மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முயல்வதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார். அதாவது எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: வெறுப்புணர்வு பற்றி எங்களுக்கு பாடம் எடுப்பதா? யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சீறிய ஸ்டாலின்!!
முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம்
இந்நிலையில் மும்மொழி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டிளிக்கையில்: தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளை கற்பிக்கிறோம். அதனால் உத்தர பிரதேசம் சிறியதாகிவிட்டதா? இங்கு தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சம்பலில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் பணி ஏப்ரலில் தொடக்கம்!
கார்த்தி சிதம்பரம் பதிலடி
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: உத்தரப் பிரதேசத்தில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர். எத்தனை மாணவர்கள் தமிழ் மொழியை கற்று வருகின்றனர். இந்த தரவுகளைத் தர உ.பி. அரசு தயாரா இந்தியை பிடித்தே அக வேண்டும் என்ற கட்டாயம் தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடையாது. தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வரும் புலம் பெயர் தொழிலாளர்கள் தமிழ் படித்துவிட்டு இங்கே வருவதில்லை. இந்தியை திணிப்பதை நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.