100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க மத்திய அரசை திமுக எம்பி கேஆர்என் ராஜேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
100 days work scheme : கிராம்ப்புற மக்களுக்கு பெரும் உதவியாக இருப்பது 100 நாள் வேலை திட்டமாகும். இந்த திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் நிலுவையில் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு நிதியை உடனடியாக விடுவிக்க திமுக எம்பி. கேஆர்என் ராஜேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களைவையில் பேசிய அவர்,
தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையை இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) மாநிலத்தில் 91 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உயிர்நாடியாக இருந்து வருவதாகவும், அதில் 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது என கூறினார்.
100 நாள் வேலைத்திட்டத்தை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இரக்கமற்ற பாஜக அரசு! முதல்வர் ஸ்டாலின்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
மேலும் சுமார் 29% தொழிலாளர்கள் SC/ST குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த முக்கியமான திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூறினார். நிலுவையில் உள்ள ஊதிய நிலுவைத் தொகையை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் கடுமையான சவால்களை தமிழ்நாடு எதிர்கொண்டுள்ளத என கூறினார். இந்த திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கான ஊதியமாக 4,034 கோடி ரூபாய் நிதி கடந்த 5 மாதங்களாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. இந்தத் தாமதத்தால் சரியான நேரத்தில் ஊதியம் கொடுக்கமுடியாத காரணத்தால் கிராமப்புறத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு ஊதியம்
இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக நிதியமைச்சர் ஏற்கனவே மத்திய நிதியமைச்சரை சந்தித்து, இந்தப் தமிழகத்திற்கு நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி ஒரு மனுவை கொடுத்துள்ளதாகவும், இதற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் 13.01.2025 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதி, நிலுவையில் உள்ள 2,985 கோடி ரூபாயை ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்கவும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். நிதியை விடுவிப்பதில் ஏற்படும் இந்த தாமதம் கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதையும் பாதிக்கிறது. இந்த நிலைமை மத்திய அரசு புரிந்து கொண்டு அவசர கவனம் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நிலுவை தொகையை விடுவியுங்கள்
எனவே, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை 4,034 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என்றும், கிராமப்புற தொழிலாளர்களுக்கு நிலையான வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் தொழிலாளர் பட்ஜெட்டை திருத்தி நிதியை அதிகரிக்கும் திட்டத்தையும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் கேஆர்என் ராஜேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.