அரசுப் பேருந்தை இயக்க விடாமல் தடுத்து தகராறு செய்த அரசு பேருந்து ஊழியர்கள் மூவர் கைது…

 
Published : May 19, 2017, 09:53 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
அரசுப் பேருந்தை இயக்க விடாமல் தடுத்து தகராறு செய்த அரசு பேருந்து ஊழியர்கள் மூவர் கைது…

சுருக்கம்

Three government staffs arrested for block the bus

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்தை இயக்க விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்ட அரசுப் பேருந்து ஊழியர்கள் மூவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பேருந்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், காவேரிப்பட்டணம் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தை இயக்கவிடாமல் தடுத்து மூன்று பேர் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த காவேரிப்பட்டணம் காவலாளர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து தகராறு செய்ததையடுத்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

அதில், அவர்கள் மிட்டப்பள்ளியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சுந்தரம் (36), சுண்டேகுப்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கிருஷ்ணன் (36), நடத்துநர் சங்கர் (47) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்