"பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து கொண்டாட்டம்" - பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது!!

Asianet News Tamil  
Published : Aug 07, 2017, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
"பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து கொண்டாட்டம்" - பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது!!

சுருக்கம்

thread to pigs periyar dravidar kazhagam members arrested

பெரியார் திராவிட கழகத்தினர், ஆவணி ஆவிட்டத்தை முன்னிட்டு பன்றிகளுக்கு பூணூல் அணிவித்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

இன்று ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூணூல் அணியும் சிலர், இன்று கோயில்களுக்கு சென்று, ஒரு குழுவாக இணைந்து, மந்திரம் ஓதி பூணூர் அணிந்து கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பன்றிக்கு பூணூல் அணிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதையொட்டி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதையொட்டி சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் பெரியார் திராவிடர் கழகத்தினர், கூட்டம் கூட்டமாக சென்றனர். இன்றைய ஆவணி ஆவிட்டம் கொண்டாடுவதை தடுக்கும் விதமாக, பன்றிகளை கொண்டு சென்று, அதற்கு பூணூல் அணிவித்தனர். இதனால், மேற்கண்ட பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, பெரியார் திராவிட கழகத்தினரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பன்றிகளை பறிமுதல் செய்தனர்.

இதைதொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும்.. வைரலாகும் செல்லூர் ராஜு பேட்டி.. கடுப்பான அதிமுக தொண்டர்கள்!
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி