
கல்லூரி மாணவிகளுக்கு பண ஆசை மற்றும் பொருள் ஆசை காட்டி, தவறான பாதைக்கு அழைத்து சென்றவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி, கணக்கு பேசாராசிரியை நிர்மலாதேவி.
தற்போது இவரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி இவரிடம் இருந்து 3 தொலைபேசி மட்டும் 5 சிம் கார்டுகள் எடுக்கப்பட்டு. நிர்மலா தேவி யாரிடம் அதிகம் பேசியுள்ளார் என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர் போலீசார்.
இதில் அருப்புக்கோட்டை நகராட்சி, ஒப்பந்த காரர், பல்கலை கழக உயரதிகாரிகள் என பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளனர்.
மேலும், கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில், நடைபெற்ற புத்தக பயிற்சியின் போது, நிர்மலா தேவியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த, தூத்துக்குடி புனித மேரி கல்லூரியின் உதவி பேராசிரியை ஜெசிந்தா தமிழ்மலரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஜெஸிகாவிடம், சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரிக்காமல் வேறு ஒரு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதிகாரிகளுக்கு ஜெசிந்தா முழு ஒத்துழைப்பு கொடுத்து பதில் தெரிவித்தார்.
மேலும் நிர்மலா தேவி பற்றி அவறிடம் கேட்டதற்கு, புத்தக கண்காட்சியின் போது, ஒரே அறையில் இருந்ததால் தங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதற்கு பின் தனக்கும் அவருக்கும் எந்த பழக்கமும் இல்லை என ஜெசிந்தா கூறியுள்ளதாக தெரிகிறது.