பேருந்து கட்டணத்தை இப்படி உயர்த்தினால் இதுதான் நிலைமை - தேமுதிகவினர் சுட்டிகாட்டி ஆர்ப்பாட்டம்...

First Published Jan 30, 2018, 9:11 AM IST
Highlights
This is the situation if you raise the bus fee - demonstration by dmdk


திருவண்ணாமலை

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திருவண்ணாமலையில் தேமுதிகவினர் மாட்டு வண்டியில் பயணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வடக்கு, தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மாட்டு வண்டியில் வந்திருந்தனர்.

பேருந்து கட்டணத்தை இந்த அளவுக்கு மாட்டு வண்டியில் தான் பயணம் செய்யணும் என்பதை உணர்த்தும் வகையில்  இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஜி.காளிராஜன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர்கள் வி.எம்.நேரு (திருவண்ணாமலை தெற்கு), ஆ.கோபிநாதன் (திருவண்ணாமலை வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

மாட்டு வண்டியில் இருந்துக்கொண்டே பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீகுமரன், பொருளாளர் பி.நிர்மல்குமார், துணைச் செயலாளர்கள் தமிழன்னை பாபு, டி.சி.சம்பத், எல்.சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

click me!