கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

 
Published : Nov 28, 2017, 04:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

சுருக்கம்

this is the kumbakonam degree coffee secret

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?

கும்பகோணம் டிகிரி காபி என்றாலே தனி வரலாறு உள்ளது. இந்த பெயருக்கு தனி மவுசு தான்...பேருந்தில் பயணம் செய்யும் போதும் சரி,காரில் சென்றாலும் சரி பைபாஸ் சாலை ஓரத்தில் உள்ள  கும்பகோணம் டிகிரி 

பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் பில்டர்கள் மூலம்  கொடுக்கப்படுவது தான்பில்டர் காப்பி என நம்மில் பலரும் நினைத்து இருப்பர் அல்லவா..உண்மையில் அதன் பின்னணி தான் என்ன தெரியுமா?

50 வருடங்களுக்கு முன்

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயத்தின் மொட்டை கோபுர வாசலில், ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ இருந்துள்ளது.அதாவது ஐம்பது வருடங்கள் முன் நடந்த சம்பவம்

இந்த கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர் என்பவர் தான் இந்த பில்டர் காப்பிக்கு மூல காரணம்

மாட்டுப் பண்ணை /தண்ணீர் கலக்காத பசும்பால் /வறுத்து அரைக்கப்பட்ட காபி தூள்

தனது கடையின் பின்புறத்திலேயே மாட்டு பண்ணையை  வைத்து,உடனுக்குடன் பாலை கறந்து, ஒரு துளி தண்ணீர் கூட விடாமல்,சுண்ட காய்த்து அதில்,வறுத்து அரைக்கப்பட்ட காபி தூள் அதனுள் சேர்த்து,சுட சுட ருசியாக கொடுப்பார்.

சொல்லும் போதே வாய் ஊறுகிறதே என நினைக்கும் அளவிற்கு தான்  கும்பகோணம் காபி இன்றளவும் இருக்கிறது

உலகறிய செய்தது யார் ?

பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசை வித்வான்கள்தான். கும்பகோணம் இசைக் கச்சேரிகளுக்கு வந்த வித்வான்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியைக் குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே,  அவர்கள் எந்தா ஊர் சென்றாலும் கும்பகோணம் பஞ்சாமி ஐயர் காபி போல் இருந்தால் அருமையாக இருக்கும் என  புலம்புவார்களாம்.

1960 தொடங்கி 1986 வரை

1960 தொடங்கி 1986 வரை கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர்தான் கொடிகட்டிப் பறந்தார்.பின்னர் இவருக்கு போட்டியாக பல கடைகள் இன்று  திறக்கப்பட்டு, ஊரெல்லாம் பரவி வியாபாரம் படு வேகமாக பரவி வருகிறது

இது குறித்து கும்பகோணத்தில் டிகிரி காபி கடை வைத்திருக்கும் ‘முரளீஸ் கபே’ உரிமையாளர் என்ன சொல்கிறார் பார்க்கலாம்..

“பித்தளையில் டம்ளர் - டவரா ‘செட்’டையும் பில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்கு. இதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். பஞ்சாமி ஐயர் இந்தத் தூளில்தான் காபி போட்டார். மத்தவங்க ஒரு தடவ காபித் தூள் போட்டா அதுலருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பாங்க. ஆனா, பஞ்சாமி ஐயர் ஒரே ஒரு தடவதான் டிகாஷன் எடுப்பாரு என தெரிவித்து உள்ளார்

அதுபோல, டிகிரி காபிக்கும் பித்தளை டம்ளர் - டவரா செட்ட்டுக்கும் சம்மந்தமே இல்லையாம்....

அதாவது கும்பகோணம் பித்தளைப் பாத்திரங்களுக்குப் பேர் போன ஊர். அதனால் அந்தக் காலத்தில் பித்தளை டம்ளரை பயன்படுத்தி உள்ளார்கள்.மேலும், மத்த பாத்திரங்களைவிடக் கூடுதல் நேரத்துக்குப் பித்தளை பாத்திரத்துல சூடு நிலைத்து இருக்கும் என்பதற்காகத்தான் அதில் கொடுக்கிறார்களாம்

இப்போது புரிந்ததா...கும்பகோணம் டிகிரி காப்பிக்கு பின் ஒளிந்திருக்கும்  ரகசியம் என்னவென்று ...

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!