
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் சரியானது. அதை அட்டவணை 9 ல் சேர்த்தால் இன்னும் பாதுகாப்பு என போராட்டக்காரர்களிடையே முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேசினார்.
அவசரசட்டம் கிடைத்துள்ளது என்பதை சட்ட வல்லுனரை வைத்து அணுகினோம். அதற்கான அரசின் அதிகார அறிக்கை வேண்டும் என்று கேட்டோம், இப்போதுதான் கொடுத்தார்கள். படித்து பார்த்தோம்.
நாங்கள் இங்கு வந்ததற்கு எந்த விதமான நோக்கமும் கிடையாது. பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு கொண்டாட மெரினாவில் ஆரம்பித்த போராட்டம் தமிழகம் முழுதும் லட்சக்கணக்கில் போராட்டத்தில் குதித்தீர்கள்
இதில் உள்ள சட்டம் சம்பந்தமாக புரிந்து கொள்ளல் வேண்டும். 7/5/2014 அன்று ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படி என்னவென்றால் , மிருக வதை தடிச்சட்டத்தின் படி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு துன்புறுத்தல் வதை ஆகும் என்று தெரிவித்தது.
அந்த வழக்கு மதுரையில் இருந்துதான் போச்சு . ரேக்ளா பந்தயம் குறித்து விசாரித்த நீதிபதி ரேக்ளா மட்டுமல்ல அனைத்து காளைகள் வைத்து நடத்தும் அனைத்துக்கும் தடை என்று . 2007 ல் மேல் முறையீடு வந்த போது அவர்களும் ம் 9/3/2007 பெஞ்ச் ரத்து செய்தது. மிருக வதையை நடக்காமல் பார்த்து கொள்ளலாம். சாதாரண மக்கள் காயப்படுவதை தடுக்க பாரிகார்ட் போடலாம் என்று தமிழக அரசுக்கு விளையாட்டை முறைப்படுத்தத்தான் உத்தரவு பிறப்பித்தது.
2007 ல் பிராணிகள் வதை தடை சட்டத்தின் கீழ் தடை கேட்டு பிராணிகள் நல வாரியம் சென்று தடை வாங்கியது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலமும் சட்டமியற்றும் அதிகாரம் உண்டு. அதுதவிர பொதுபட்டியல் உண்டு. அதில் சட்டம் இயற்றினால் அதில் திருத்தம் கொண்டு வரவேண்டுமானால் சட்டத்திருத்தம் தான் கொண்டுவர வேண்டும்.
11/3 ல் மிருக வதை இதெல்லாம் கிடையாது என்ற லிஸ்ட் உண்டு. ஒரு மிருகத்தை உணவுக்காக வெட்டினால் அது மிருக வதை கிடையாது. சூடு வைத்தால் வதை கிடையாது. ஆண் தன்மையை போக்குவது , மூக்கனாங்கயிறு போடுவது , கொம்பை அகற்றுவது வதை இல்லை. லாடம் அடிப்பது வதை இல்லை.
இதெல்லாம் வதை கிடையாது. பிரியாணி போடுவது வதை இல்லை, பலி கொடுத்தால் வதை கிடையாது , ஜல்லிக்கட்டு மட்டும் எப்படி அந்த சட்டத்துக்கு திருத்தம் கேட்டோம்.
அதற்கு தமிழக அரசு சட்டம் இயற்றி திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று கேட்டோம்.
2011 ல் தீர்ப்புக்கு முன்பு அப்போதைய சுற்று சூழல் அமைச்சர் பிரிவு 22 ன் கீழ் ஒரு அறிவிப்பு கொடுத்து காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் சிங்கம் , புலி ,குரங்கு உள்ளது. அதில் காளையை சேர்க்கிறார்கள்.
அதையும் வழக்கில் சேர்க்கிறார்கள். காட்சிப்படுத்துதல் பிரிவு 27 சில விலக்குகள் தரலாம். காவல்துறையோ , ராணுவமோ பயன்படுத்தக்ககூடிய விலங்குகளை வதைப்படுத்தினாலும் அது வதை அல்ல. அறிவியல் நோக்கத்திற்காக ஒரு விலங்கை துன்புறுத்தினால் அதில் விலக்கு உண்டு.
11/3 , 22 . 27 ல் திருத்தம் 3 லும் திருத்தம் கொண்டு வர அசம்ப்ளி கூட வேண்டும். அவசர சட்டம் 6 மாதத்தில் இருக்கும் அதற்குள் கூடி அசம்ப்ளியில் நிறைவேற்ற வேண்டும். அதற்கு அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். பொதுப்பட்டியல் குறித்த அவசர சட்டத்திற்கு முன் அனுமதி வாங்க வேண்டும். 21 ஆம் தேதி அவசர சட்டம் கொண்டு வந்தார்கள்.
அதற்கு முன்னர் டிவி விவாதங்களில் இந்த 3 விஷயங்களை சேர்க்க கேட்டிருந்தோம். ஆனால் அரசாங்கம் இந்த அவசர சட்டத்தில் இது பற்றி சொல்லவில்லை. அந்த சட்டத்தின் கீழ் சல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதி பெறுகிறார்கள்.
இன்று காலையில் நண்பர் ஒருவர் ஈமெயிலி அனுப்புகிறார். ஏன் சார் அவசர சட்டம் ரகசியமாக இருக்கு என்று. இன்று காலையில் அவசர சட்டம் நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் உள்ளது.
ஏன் அதை அரசு வெளியிட வில்லை என்று தெரியவில்லை. அவசர சட்டம் என்றால் அசெம்ப்ளி கூடாத வரை. அசெம்ப்ளி கூடும்போது அதை சட்டமாக்க வேண்டும். அசெம்ப்ளியில் பாஸ் செய்த பின்னர் பின் அனுமதி வாங்க வேண்டும். மத்திய அரசு ஒத்துகொண்ட சட்டத்தை கொடுத்துள்ளதால் பின் அனுமதி கிடைக்கும்.
காலையிலேயே ஒழுங்கான காப்பி கொடுத்திருக்க வேண்டும்.அவசர சட்டத்தை வெளிப்படுத்தாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதும், நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லுவதும் இந்த நிகழ்ச்சிக்கு காரணம் என்கிறேன்.
ஆகவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஜல்லிக்கட்டு நிற்பதற்கு வழிவகுக்கும். எல்லா சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்கலாம். அப்படி வரும்போது சட்டத்தை காப்பாற்றத்தான் இந்த திருத்தம்.
69 % இட ஒதுக்கீட்டை அட்டவணை 9 ல் சேர்த்துள்ளனர். அப்படி வைத்து விட்டால் அதில் எந்த வழக்கும் போட முடியாது. அதில் இதை சேர்க்கணும். இன்னும் பாதுகாப்பு வேண்டும் என்றால் சட்டமாக்கி டெல்லிக்கு அனுப்பி அரசமைப்பு சட்டம் அட்டவணை 9ல் சேர்க்க வேண்டும்.
இதற்கு மேல் முடிவெடுப்பது உங்கள் இஷ்டம். நீங்கள் போராடியதன் விளைவுதான் இந்த சட்டம் வந்தது.இவ்வாறு அவர் பேசினார்.