திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா நகை கொள்ளை…. திருடியது யார் தெரியுமா ? கேட்டா அசந்துதிருவீங்க!! 

 
Published : May 29, 2018, 09:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா நகை கொள்ளை…. திருடியது யார் தெரியுமா ? கேட்டா அசந்துதிருவீங்க!! 

சுருக்கம்

thiruvallur bank of india jwells theft

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8  கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அந்த வங்கியில் பணி புரியும் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம இருந்து 32 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் சூப்பர் மார்க்கெட் கட்டட்ம் ஒன்று உள்ளது. அந்த கட்டடத்தின் மாடி பகுதியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. நேற்று  வழக்கம் போல் வங்கியை திறக்க முயன்றபோது பூட்டு திறந்தே இருந்ததது.இதனால் அதிர்ச்சி அடைந்த மேனேஜர், பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மற்றும் அறைகளை சென்று பார்த்த போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த  6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைககள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரணை நடத்தினர்.  வங்கியின் பூட்டுக்கள் உடைக்கப்படவில்லை, சுவற்றில் ஓட்டை எதுவும் போடப்படவில்லை. ஆனால் லாக்கர்ல் இருந்த நகை மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனால் வங்கியில் பணி புரியும் ஊழியர்கள் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் அதே வங்கியில் பணி புரியும் 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 32 கிலோ நகைளை பறிமுதல் செய்தனர். வங்கி ஊழியர்களே கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!