திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்! மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா?

Published : Jul 12, 2025, 07:00 PM IST
School students

சுருக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரும் 14ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அதிமுக கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கோரிக்கை விடுத்துள்ளார். 

அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில்: அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக உள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் வரும் 14ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதிமுக ஆட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.

14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

அதனைத் தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து தற்போது திருப்பரங்குன்றத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதுகுறித்து சட்டமன்றத்தில் கும்பாபிஷேகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் நான் கூறினேன். அதற்கு முதலமைச்சர் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். இதுவரை ஒதுக்கப்படவில்லை கும்பாபிஷேகத்திற்கு தனியார் பங்களிப்பு தான் அதிகமாக உள்ளது. கும்பாபிஷேக பணிகள் குறித்து அமைச்சர்களுடைய ஆய்வுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாக தெரியவில்லை. திருப்பரங்குன்றம் கோவிலை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களும் பக்தர்களும் வருகிறார்கள். ஆனால் இந்த அரசு உள்ளூர் விடுமுறை அதாவது திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளித்து இருப்பது வேதனையாக உள்ளது.

மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை அளிக்கப்பட்டது. அதேபோல திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்திற்கு மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். இந்த கும்பாபிஷேகத்திற்கு மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள மக்களும் வருகை தருவார்கள். அழகர் ஆற்றில் இருக்கும் பொழுது உள்ளூர் விடுமுறை உள்ளது. அதேபோல இதற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் இதுதான் மக்களின் கோரிக்கையாகும்.

உரிய பாதுகாப்பு மக்களுக்கு அளிக்க வேண்டும்

திருப்பரங்குன்றம் திருக்கோவிலை சுற்றி இருக்கக்கூடிய ஒரு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து இருப்பது நியாயமாகாது. திருச்செந்தூர் கோவிலின் சிறப்பாக நடைபெறுவதற்கு என்ன ஏற்பாடுகள் செய்தார்களோ அதே போன்று உரிய பாதுகாப்பு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். மாவட்ட ஆட்சித் தலைவரும், அமைச்சர்களும் உடனடியாக கலந்த ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். 23 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் வசதி அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அந்த நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை. அதேபோல மல்டி கார் பார்க்கிங் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் அதுவும் நிறைவேற்றப்படவில்லை

உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாகம் செய்ய வேண்டும்

தற்பொழுது திருப்பரங்குன்றம் பகுதியை பொறுத்தவரை தூய்மை பணியாளர்களை எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு மக்கள் வருவார்கள் அவர்களுக்கு தரிசிக்கக் கூடிய வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாகம் செய்ய வேண்டும். காவல்துறையினர் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை? தமிழகம் முழுவதும் பக்தர்கள் வருவார்கள் அவர்கள் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். அதேபோல வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் முறைப்படுத்த வேண்டும் என கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! எத்தனை மணி நேரம் தெரியுமா?
ஆடு வெட்டி புது சடங்கு உருவாக்கினது தான் பிரச்சனைக்கு காரணமே..! திருப்பரங்குன்றம் பின்னணியின் உண்மை உடைக்கும் திமுக எம்.பி தங்க தமிழ்ச்செல்வன்..!