திருமுருகன் காந்தி மீண்டும் கைது - இந்தியன் ஆயில் நிறுவனத்தை எதிர்த்து போராடியதாக புது வழக்கு...

 
Published : May 31, 2017, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
திருமுருகன் காந்தி மீண்டும் கைது - இந்தியன் ஆயில் நிறுவனத்தை எதிர்த்து போராடியதாக புது வழக்கு...

சுருக்கம்

thirumurugan gandhi arrested again

குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையிலுள்ள திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது. தேனாம்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதாகவும், அலுவலகம் மீது கல்வீசியாதாக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தனி ஈழம் கோரி போராடியதால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு தடையை மீறி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்  திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் தனிஈழம் கோரி போராடி வந்த ஈழ தமிழர்களை மீது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ராணுவம் கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அராஜகம், மிருகத்தனமான தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது. பெண்களை மானப்பங்கப்படுத்தி, நிர்வாணப்படுத்தி கொத்து கொத்தாக கொன்று குவித்தது.

தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில்  சென்னை மெரினாவில் கடந்த 7 ஆண்டுகளாக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரை கைது செய்த போலீஸார் அவர்களை நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு ஆஜர்படுத்தினர். 17 பேரையும் வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் முடிவடைந்த நிலையில் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, புழல் சிறையிலுள்ள திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது. தேனாம்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதாகவும், அலுவலகம் மீது கல்வீசியாதாக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். திருமுருகன் காந்தியுடன் தமிழர் விடியல் கட்சி டைசன் இளமாறன் அருண், டைசன், இளமாறன் ஆகியோரை மீண்டும் கைது செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!