ஆதவ் அர்ஜுனா அவசரப்பட்டு விட்டார்- முட்டுக் கொடுக்கும் திருமாவளவன்!!

Published : Dec 16, 2024, 07:20 AM ISTUpdated : Dec 16, 2024, 06:49 PM IST
ஆதவ் அர்ஜுனா அவசரப்பட்டு விட்டார்- முட்டுக் கொடுக்கும் திருமாவளவன்!!

சுருக்கம்

திமுக ஆட்சியை விமர்சித்ததால் 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியோடு இணைந்து விடுதலை சிறுத்தை கட்சி தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டும் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்ற ஆதவ் அர்ஜுனா, கூட்டணி கட்சியான திமுகவை  விமர்சனம் செய்து வந்தார். திமுக ஆட்சி மன்னர் ஆட்சி என்றும் 2026 ஆம் ஆண்டு முடிவு ஏற்படும் எனவும் கூறி இருந்தார்.

இந்தப் பேச்சுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு உருவான நிலையில் கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் எழுந்தது, இதனிடையே திமுகவை விமர்சித்த விடுதலை சிறுத்தை கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் காலம் சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த சில தினங்களாக அமைதி காத்து வந்த ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்கக் கூடாது என்று எண்ணுகிறேன்.

இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில்  'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்'' என கூறினார்.

இதற்கு பதில் அளித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், ''ஆதவ் அர்ஜூனை நீக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது, உடனே எதையும் சாதித்துவிட வேண்டும் என்று துடிக்கிறார். அவர் என்ன நினைத்தாலும் அது கட்சிக்குள் சொல்லி கட்சியின் குரலாக ஒலிக்க வேண்டும்.

சரி என்ற அடிப்படையில்தான் அவர் அந்த முடிவை எடுத்திருக்கிறார். கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. மேலும் பொதுவாழ்வில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் எப்போதும் முக்கியமானது. அந்த வாய்ப்பை விடுதலை சிறுத்தை கட்சியில் அவர் பெறுவார் என எதிர்பார்த்தேன். இது அவசரமான முடிவு. எனவே ஒரு அமைப்பின் கட்டமைப்பு புரிதல் ஆளும் அர்ஜுனாவிற்கு தேவை'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் விடுமுறை!
Tamil News Live today 20 December 2025: அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி