
நெல்லை அருகே ஓராண்டுக்கு முன் கட்டிய திருக்குறுங்குடி ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.
கன்னியாக்குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை காரணமாக சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இரண்டு மாவட்டஙகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் ரயில் தண்டவாளங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை அருகே திருக்குறுங்குடி ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்துள்ளது. ஓராண்டுக்கு முன் கட்டிய பாலம் இடிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாலம் கட்டிய ஒப்பந்தக்காரர் ஆளும்கட்சிக்காரர் என்றும் சரியான முறையில் பாலத்தை கட்டாததால் இடிந்து விழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாலம் இடிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல கிமீ சுற்று செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பாலத்தை உடனாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.