
பொதுமக்கள் பய்ன்பாட்டுக்காக வைக்கப்பட்ட நிழற்குடையயே அறுத்து எடுத்து செல்ல முயன்ற 3 பேரை அந்த வழியாக ரோந்ந்து வந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வடபழனி திருநகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிற்பதற்காக நிழற்குடை ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடை அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களால் ஆனது. பல லட்சம் மதிப்புள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் 3 ஆசாமிகள் பயணியர் நிழற்குடையை அறுவை இயந்திரம் கொண்டு அறுத்தெடுத்து வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். ஏதோ சென்னை மாநகராட்சிக்காக வேலை செய்வது போன்று சர்வ சாதாரணமாக அவர்கள் அறுத்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்தனர். புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை உடனடியாக எதற்காக அகற்றுகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் முன்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் மூன்றுபேரையும் பிடித்து வடபழனி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிழற்குடையை திருட முயன்றவர்களில் முக்கிய குற்றவாளி ரிபாய் என்பது தெரியவந்தது.