தனியார் முகவர்களிடம் மின் கட்டணம் செலுத்தி ஏமாற வேண்டாம் - தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தல்

Asianet News Tamil  
Published : Nov 02, 2016, 02:57 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
தனியார் முகவர்களிடம் மின் கட்டணம் செலுத்தி ஏமாற வேண்டாம் -  தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தல்

சுருக்கம்

மின்கட்டணத்தை வசூலிக்க எந்த முகவர்களையும் நியமிக்கவில்லை என்றும், தனியார் முகவர்களிடம் மின் கட்டணத்தை செலுத்தி நுகர்வோர் ஏமாற வேண்டாம் எனவும் தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மின்கட்டணம் செலுத்த, மின்வாரிய அலுவலகங்கள், இ-சேவை மையங்கள், அஞ்சல் அலுவலகங்களில் வசதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தவிர சிட்டி யூனியன், லட்சுமி விலாஸ், தமிழ்நாடு மெர்க்கன்டைல் ஆகிய 3 வங்கிகளில் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொபைல் ஆப்ஸ் வாயிலாகவும் மின் கட்டணம் செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு தனியார் முகவர்களுக்கும் மின் கட்டணத்தை வசூலிக்க அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ள மின்வாரியம், முகவர்களிடம் மின் கட்டணத்தை செலுத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்படக் கூடும் என எச்சரித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடியின் தமிழக விசிட்...! அதிமுக-பாஜகவுக்கு திமுக தரப்போகும் ட்விஸ்ட்..!
குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி