
இராமேசுவரம் கோவிலில் தொடர் திருட்டை கண்டுகொள்ளாமல் அலட்சியத்தை காட்டும் போலீசாரால், திருடர்கள் மீண்டும் மீண்டும் தங்களது கைவரிடையை காட்டி கொள்ளையடித்துச் செல்வதால் அடியார்கள் கடுப்பாகி உள்ளனர்.
இராமேசுவரம் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் அடியார்கள் வருவது அனைவரும் அறிந்ததே.
இராமேசுவரம் கோவிலுக்கு வரும் அடியார்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் குளித்துவிட்டு அதன் பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் குளித்த பின்னரே சாமி தரிசனம் மேற்கொள்வர்.
அமாவாசை மற்றும் முக்கிய திருவிழா நாள்களில் அக்னி தீர்த்த கடலில் அடியார்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அடியார்களின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடியார்கள் போன்று ஆண், பெண் திருடர்கள் கும்பலாக வந்து கடலில் குளிக்கும் அடியார்களிடம் நகைகளை பறித்துச் சென்று விடுகின்றனர்.
இராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் ஜே.ஜே.நகரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் அடியார்கள் நிறுத்திச் செல்லும் வாகனங்களின் கண்ணாடியை உடைத்தும் திருடர்கள் சர்வ சாதாரணமாக வாகனங்களில் உள்ள நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
இதுவரை கோவிலுக்கு வெளியிலேயே கைவரிசையை காட்டிவந்த அடியார்கள் தற்போது கோவிலுக்கு உள்ளேயும் தங்களது திருட்டுத்தனத்தை காட்டத் தொடங்கியுள்ளனர்.
நகை மற்றும் பணத்தை பறி கொடுத்தவர்களில் பலர் காவலாளர்களிடம் புகார் செய்வதில்லை. சிலர் புகார் கொடுத்திருந்த போதிலும் அந்த வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவலாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பவில்லை.
இதை தெரிந்து கொண்ட திருடர்கள் கோவில் பகுதியில் அசால்டாக வந்து கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
இராமேசுவரம் கோவிலுக்கு வரும் அடியார்களின் பாகாப்புக்காக காவல் துறை சார்பில் அக்னி தீர்த்த கடற்கரை, கோவிலின் கிழக்கு, மேற்கு நுழைவு பகுதி, 4 ரத வீதி மற்றும் கோவிலுக்கு உள்பகுதி என மொத்தம் 54 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை தனி அறையில் அமர்ந்து மானிட்டரில் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க கூட இங்கிருக்கும் காவலாளர்கள் அலட்சியத்தை காண்பிக்கின்றனர். இதன் காரணமாக கண்காணிப்பு கேமரா பொருத்தியும் எந்த பயனும் இல்லை என்பது நன்றாக தெரிகிறது.
இந்த கோவிலுக்கு உள்ளே கோவில் நிர்வாகத்தின் சார்பில் 24 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் கோவில் அலுவலகத்தில் உள்ள 2 பெரிய மானிட்டர் மூலம் கண்காணிக்கப்படுகின்றன,
அடியார்கள் அதிகம் கூடும் கோடி தீர்த்தம் உள்ளிட்ட முக்கிய தீர்த்த பகுதியிலும், இலவச தரிசன பாதை வழியாக அடியார்கள் செல்லும் சாமி சன்னதியின் முதல் பிரகாரத்திலும் கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
கோவிலில் பாதுகாப்பு பணிக்காக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம் 70 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இருந்தபோதிலும் கோவிலின் உள்பகுதியில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே செக்யூரிட்டி பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர்.
இதன் காரணமாகவும் அடியார்களிடம் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது என்று அடியார்கள் குற்றம் கூறுகின்றனர்
அடியார்காளில் ஒருவர் கூறியது:
இராமேசுவரம் கோவில் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டை முழுமையாக தடுத்து நிறுத்தி, திருட்டு கும்பல்களை உடனடியாக கைது செய்து கோவிலுக்கு வரும் அடியார்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க காவல் அதிகாரிகளும், கோவில் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், காவலாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை பார்க்கும்போது, அவர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்று கூட சந்தேகிக்கத் தோணுகிறது” என்று தெரிவித்தார்.