
இராமேசுவரத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை தடுக்கக்கோரி தமிழர் தேசிய முன்னணி கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இராமேசுவரத்தில் கடந்த சில வாரங்களாக குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மர்ம காய்ச்சலை தடுத்த சுகாதாரதத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் புகார் கூறுகின்றனர்.
அதிகாரிகளின் இந்த செயலால் மர்ம காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது, இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி கட்சியின் சார்பில் இராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கண்.இளங்கோ தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மன்மதன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், நகர் தலைவர் செந்தில், செயலாளர்கள் சூரியகுமார், ரீகன், ராசு, இளைரணி செயலாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.