மக்களுக்கு துரோகம் செய்த ஸ்டாலின்! திமுக ஆட்சியை தூக்கி எறிய தயாராகிவிட்டனர்! பிரதமர் மோடி

Published : Mar 11, 2026, 07:09 PM ISTUpdated : Mar 11, 2026, 07:31 PM IST
PM modi

சுருக்கம்

PM Modi: திருச்சி பஞ்சப்பூரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுகவின் குடும்ப ஆட்சியை மக்கள் தூக்கி எறிய தயாராகிவிட்டதாகக் கூறினார்.

திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன், அன்புமணி உள்பட தேசிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழில் அனைவருக்கும் வணக்கம் எனக் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது திருச்சி மலைக்கோட்டை, விநாயகர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் ஆகியவற்றை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தது ஒரு தெய்வீக அனுபவம் என்றார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுகவை தூக்கி எறிய மொத்த மாநிலமும் தயார் ஆகிவிட்டது குடும்ப ஒரு குடும்பத்திற்கான ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு ஒட்டுமொத்த மக்களுக்கான ஆட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர். தமிழ்நாட்டில் இந்திய ஆட்சியால்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக பெரிய முதலீடுகள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திருச்சியில் புதிய விமான நிலையம் முனையம் அமைத்த பின்னர் பலர் தங்கள் மகிழ்ச்சியை என்னிடம் வெளிப்படுத்தினர். பழமையான மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி உள்ளோம் மதுரையில் காலையில் பறிக்கப்படும் மல்லிகை பூவை மாலை பாரிஸ் நியூயார்க்கில் விற்கலாம். மதுரை விமான நிலையத்தில் இருந்து இனி சர்வதேச நகரங்களுக்கு விற்பனை செய்யலாம்.

காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழ்நாட்டிற்கு தரப்பட்ட நிதியை விட பாஜக ஆட்சியில் 4 மடங்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. என்டிஏ ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு மூன்று லட்சம் கோடி நிதி பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. திமுக மக்களாட்சிக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் மக்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டது. மக்கள் கொடுத்த பொறுப்பை திமுக தவறாக பயன்படுத்தி ஒரு குடும்பத்திற்கு மட்டுமே அனைத்தும் சென்று கொண்டிருக்கிறது. ஒரு குடும்பம் மட்டுமே வளர்ந்து வரும் அளவிற்கு திமுக விஞ்ஞான ஊழல் செய்து வருகிறது. வேலைகள் காசுக்கு விற்கப்படும் போது ஏழைகளின் கனவு நசுக்கப்படுகிறது என பிரதமர் மோடி கூறினார்.

மேலும் பேசிய அவர் மேற்காசிய போர் தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பி அச்சமடைய வேண்டியதில்லை. போரால் எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு. நிலைமை எப்படியானாலும் இந்தியர் நலன் பாதுகாக்கப்படும். சிலிண்டர் தட்டுப்பாடு நெருக்கடியில் இருந்தும் மீண்டு வருவோம். கொரோனா நெருக்கடியை பார்த்தவர்கள் நாம் என்று பிரதமர் மோடி பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல்.. திமுகவை எகிறி அடித்த நயினார் நாகேந்திரன்!
மலைக்கோட்டை நகரில் கெத்தாக கால்பதித்த பிரதமர் மோடி.. தமிழகத்துக்கு ரூ.5,655 கோடி 'மெகா' பரிசு!