
மாடுகள் விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் ‘மாட்டிறைச்சி திருவிழா’ நடத்தி மாட்டுக்கறி சமைத்து உண்டனர்.
கேரளமாநிலத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் மாட்டிறைச்சி திருவிழா நடத்த மாணவர்கள் தொடங்கிவிட்டனர்.
மத்திய அரசு இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்கவோ, வாங்கவோ தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன.
கேரள மாநிலத்தல் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி, எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது . பொது இடத்தில் மாட்டுக்கறி விருந்து நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
அவர் வௌியிட்ட அறிக்கையில், “ கேரளாவில் கன்றுக்குட்டியை வெட்டிய சம்பவம், உண்மையில் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. சிந்தனையில்லாதது. இந் செயலை நானும், காங்கிரஸ் கட்சியும் முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்த விஷயத்தை கடுமையாக கண்டிக்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை இடைநீக்கம் செய்யப்பட்டதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.
இந்நிலையில், மாடுகள் விற்பனைக்கு தடையை எதிர்த்து தமிழகத்திலும் பல்வேறு கட்சியினர போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இஸ்லாமிய அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மத்தியஅரசுக்குஎதிராக தொடர் போராட்டங்களை நடத்தி, எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐ.ஐ.டி.யில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்றுமுன்தினம் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியுள்ளனர். அப்போது மாணவர்கள் மாட்டிறைச்சியை கடைகளில் வாங்கிவந்து, மாணவர்கள் அனைவரும்மத்தியஅரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி உண்டனர்.
ஏற்கனவே இதேபோல முற்போக்கு எழுத்தாளர்களானதபோல்கர், குல்புர்க்கி இந்து அடிப்படை வாதிகளால் கொல்லப்பட்டபோதும் இதே போல ஐ.ஐ.டி.யில் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தது. மத்தியஅரசின் நிறுவனத்தில் அரசுக்கு எதிராகவே மாணவர்கள் போராட்டம் நடத்திஇருப்பது குறிப்பிடத்தக்கது.