
ரஜினி நடித்து வரும் காலா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் லுக்கி சகிதமாக ரஜினி அமர்ந்திருக்கும் பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றதோடு, திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் எகிறச் செய்தது.
போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று பட்டும் படாமல், அரசியல் குறித்து ரஜினி பேசியிருந்தாலும், தற்போது அவரைச் சுற்றியே அரசியல் நடைபெற்று வருகிறது.
காலா முன்னெடுத்துச் செல்வது கமர்ஷியலா...? அரசியலா....? என்ற விவாதங்கள் பட்டி தொட்டி எல்லாம் படுவேகமெடுக்க, காலாவுக்கு மேலும் ஹம்பக் ஏற்றியிருக்கிறார் மஹிந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திரா.
அண்மையில் ஸ்கார்பியோ காரைப் போல் வடிவமைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றை பல மாத தேடல்களுக்குப் பின்பு அதனை கேரளாவில் கண்டுபிடித்த ஆனந்த் மஹிந்திரா, அதன் உரிமையாளருக்கு புது வேனை பரிசாக அளித்து அந்த ஆட்டோவை வாங்கிக் கொண்டார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், காலா பர்ஸ்ட் லுக்கில் ரஜினி அமர்ந்திருக்கும் தார் ஜீப்பை தனது அருங்காட்சியகத்தில் வைக்க விரும்புவதாகவும், ஜீ்ப் இருக்கும் இடம் அறிந்தவர்கள் தனக்கு தகவல் தெரிவிக்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலாவுக்கு நல்ல காலம் தான்........!