முதலமைச்சரை பார்த்தும் திருப்தி இல்ல... அண்ணாமலையை ஆபீசுக்கே போய் பார்த்த ஸ்ரீமதி அம்மா செல்வி..

By Ezhilarasan Babu  |  First Published Sep 2, 2022, 7:47 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் ஏற்கனவே தமிழக முதல்வரை சந்தித்த நிலையில் இன்றுதமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் ஏற்கனவே தமிழக முதல்வரை சந்தித்த நிலையில் இன்றுதமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அண்ணாமலையை சந்தித்தபோது  தங்களின் மகளுக்கு நீதிபெற்றுத் தர உதவ வேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பயின்று வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மூன்றாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிவருகிறது. ஆனால் தங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தங்கள் மகள் பள்ளி நிர்வாகத்தால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டதற்கான தடையங்கள் இல்லை என்றும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: ரேஷன் கடையில் இனி கூகுள் பே, பேடிஎம் வசதி.. மாவட்டத்திற்கு 10 மாதிரி கடை.. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்

மாணவி தற்கொலைதான் செய்து கொண்டார் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் முனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் ஆசிரியர்கள் படிக்கச் சொன்னதால் மாணவி தற்கொலை செய்துகொண்டது துரதிஷ்டவசமானது, என வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால் நீதிபதிகள் இந்த கருத்தை பலரும் பல வகையில் விமர்சித்து வருகின்றனர், ஜாமீன்  கோரிய வழக்கில் நீதிபதி ஏன் தீர்ப்பை எழுதினார் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே நீதிபதி எப்படி இது தற்கொலைதான் என்ற முடிவுக்கு வந்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: 

நீதிபதியின் இந்த கருத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் விமர்சித்துள்ளனர். 
இதனால் மாணவியின் பெற்றோர் நீதித் துறையின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். முன்னதாக தங்கள் மகளின் மரண விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் தவறிழைத்தவர்கள் தப்பிக்க கூடாது என தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர், அப்போது அவர் தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது எற ஆறுதல் கூறி அனுப்பி வைத்திருந்தார். ஆனால் நீதிமன்றம் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவே தெரிவிக்கிறது. மருத்துவ அறிக்கைகளும் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்ரீமதியின் பெற்றோர், இன்று தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்துள்ளனர். அண்ணாமலையை சந்தித்தால் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர். இன்று பிற்பகல் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்த அவர்கள் அண்ணாமலையை சந்தித்து தங்களது சந்தேகங்களை எடுத்துரைத்தனர், தங்கள் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அவர்கள் கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினர்.
 

click me!