மகிழ்ச்சி...! "ஆன்லைன் பரிவர்த்தனைக்கு வரி ரத்து"...! குஷியான மக்கள்..!

First Published Jan 2, 2018, 3:49 PM IST
Highlights
there is no tax for online transactions said cent govt


2, 000 ரூபாய் வரையிலான பண பரிவர்த்தனைக்கு, கட்டண வரி செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதாவது,டெபிட் கார்டு,மற்றும் பீம் செயலி மூலம் மேற்கொள்ளப்படும்  பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு சிறப்பு சலுகையை அறிவித்து உள்ளது.

அதன்படி,டெபிட் கார்டு, பீம் செயலி மூலம் 2000 ரூபாய் வரை பண பரிவர்த்தனைகள் செய்தால்,அதற்காகும் வரியை அரசே செலுத்த  முடிவு செய்துள்ளது.

அதாவது பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு,குறைந்த மதிப்பிலான ரூபாய் கூட டிஜிட்டல் முறையில் செலுத்த மக்கள் முன்வர வேண்டும் என்பதற்காகவும், அவ்வாறு  அனைத்து மக்களும் ஆர்வம் காட்டினால் தான், இந்தியா முழுமையான டிஜிட்டல் மையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முதல் அமலுக்கு வந்த இந்த திட்டமானது இரண்டு ஆண்டு காலம் வரை செல்லும் என்பது கூடுதல் தகவல்.

இந்த கட்டண வரியை அரசே ஏற்றுக்கொள்வதன் காரணமாக,அரசுக்கு ரூ.2,521 கோடி இழப்பு ஏற்படும் என நிதி சேவைகள் செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த முடிவால், இனி வரும் காலங்களில்,பணமில்லா பரிவர்த்தனையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!