
தப்பித்ததா சிறுதாவூர் பங்களா..? சிக்கக்கூடாதவர்கள் சிக்கிடுவார்களோ? பின்னணி...
பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாத ஒரு மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லலாம் ...அரசியல் சூழ்நிலை முதல் போராட்டம், சாலை மறியல் என தொடர்ந்து டெங்கு வரை தினம் தினம் ஏதோ ஒன்று பற்றி பரபரப்பாக பேசப்படும்..
இந்நிலையில் மீண்டும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வருமானவரி சோதனை
இன்று அதிகாலையிலிருந்து சசிகலாவின் குடும்பத்தினர் நிறுவனங்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 160 கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிகழ்த்தி வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல், ஆந்திரா,பெங்களூரு உள்ளிட்ட 27 இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது
எங்கெல்லாம் சோதனை நடிக்கிறது ?
கொடநாடு எஸ்டேட்டிலும்,ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திலும், ஜெய டிவியின் பழைய அலுவலகம், தினகரன் வீடு , தினகரன் மாமனார் வீடு உள்ளிட்ட பல இடங்கள் அடங்கும்
அதாவது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய பல நிறுவங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்
சிறுதாவூர் பங்களா மட்டும் சோதனைக்குள் வரவில்லை ஏன்?
ஊர் முழுக்க சோதனை செய்கிற வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் இன்னும் சோதனை நடத்தவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அப்படி என்ன தான் சிறப்பம்சம் இங்க இருக்கு?
சிறுதாவூர் பங்களா பல்வேறு சர்ச்சைகள், மர்மங்கள் நிரம்பியது ஏற்கனவே தெரிந்தது தான்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த பங்களாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக தகவல் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
கண்டெய்னர்களில் பணம்
கண்டெய்னர்களில் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டது நினைவிருக்கிறதா?
கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, இந்த பங்களாவிலிருந்து ஏகப்பட்ட கண்டெய்னர்களில் பணம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது என மாபெரும் சர்ச்சை கிளம்பியதை யாரும் மறந்திருக்க முடியாது .
மர்மங்கள் உடையுமா ? அப்படி என்னதான் அங்கு இருக்கிறது ?
தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினற்கு சொந்தமான 160 கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வரும் போது சிறுதாவூரில் மட்டும் ஏன் சோதனை நடத்தவில்லை என்ற மாபெரும் கேள்வி எழுந்துள்ளது
காரணம்:
அரசியல் உள்நோக்கத்துடன் தான் இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்று தினகரன் தரப்பு தெரிவித்தாலும், ஏன் சிறுதாவூரில் மட்டும் சோதனை நடத்தவில்லை? அப்படியென்றால் இதற்கு பின்னனி என்ன ? ஒரு வேளை அங்கு சோதனை நடத்தினால், சிக்க கூடாதவர்கள் சிக்கி விடுவார்களோ என்ற காரணம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதால் உண்மையில் அரசியல் நோக்கத்துடன் தான் இந்த வருமான வரித்துறை நடைபெற்று வருகிறதோ என பலரும் எண்ணத்தொடங்கி உள்ளனர்