வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை..! அருண்ஜெட்லி அதிரடி..!

First Published Feb 1, 2018, 1:00 PM IST
Highlights
there is no change in income tax extreemed level


வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை

நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ,இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.அதன்படி பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டே உள்ளது

தற்போது அதிமுக்கிய அறிவிப்பாக,வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இதுவரை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 சதவீதமும்,

ரூ.10 லட்சத்துக்கும் அதிகம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30 சதவீதமும் தற்போது வரி விதிக்கப்படுகிறது.

எதிர்பார்த்தது

ரூ.4 லட்சம் வரையில் வருமாவரியிலிருந்து விலக்கு அளிக்க நிதி அமைச்சகம் பரிசீலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின.இது குறித்து முக்கிய அறவிப்பு வெளியாகும் என  எதிர்பார்க்கப் பட்ட நிலையில், வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என   அருண்ஜெட்லி தெரிவித்தார்.

அதாவது குறைந்தபட்சம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சத்திற்குள் இந்த மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மட்டும் ஜேட்லி அறிவித்தார். இதனால் நடுத்தரவர்க்கத்து மக்கள் வரி பிடியிலிருந்து தப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை

உணவு பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு

ஜவுளி துறைக்கு ரூ7,148 கோடி ஒதுக்கீடு

கிராமபுற சுகாதாரத்துக்கு ரூ16,713 கோடி

புதிய ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும்

பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைப்பு

முத்ரா யோஜனா கீழ் ரூ3 லட்சம் கோடி கடனுதவி

99 புதிய நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படும்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வளர்ச்சிக்கு ரூ. 1.5 லட்சம் கோடி

கல்வித்துறை வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி

அனைத்து ரயில்களிலும் வைபை வசதி, சிசிடிவி பொருத்தப்படும்

25,000 பேருக்கு அதிகமாக பயன்படுத்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்கள்

கங்கையை தூய்மைக்க 187 திட்டங்கள்

ரயில் நிலையங்கள், ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்

9,000 கிலோ மீட்டருக்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்

ஸ்மார்ட், அம்ருத் திட்டங்களுக்கு ரூ2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு

ரயில்வே துறைக்கு ரூ1.48 லட்சம் கோடி என  பல்வேறு  துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  உள்ளது.

click me!